states

img

ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கியது ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்!

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி, அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஹேமந்த் சோரன் தரப்பில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. முதன்மைக் கண்ணோட்டத்தில் அவர் குற்றவாளி அல்ல என்றும், ஜாமீனில் இருக்கும்போது மனுதாரர் குற்றம் செய்ய வாய்ப்பில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதை அடுத்து ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. 
 

;